in

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் 5ம் தேதி பிரச்சாரம்

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு நேர கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் காவல்துறை நான்கு மணி நேரம் கட்டுப்பாடு விதித்து உள்ளது

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் 5ம் தேதி பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் நிபின் நபி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருகையால் நான்காம் தேதிக்கு பிரச்சாரத்தை மாற்றி காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் புதுச்சேரி தவெக தேர்தல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணனிடம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நேர கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி விஜய் முழுமையாக பிரச்சாரம் செய்து புதுச்சேரியில் இருந்து கிளம்பும் வரை அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது அதன்படி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி ..நாளை மறுதினம் புதுச்சேரியில் நான்கு மையங்களில் விஜய் பிரச்சாரம் ..காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ..மதியம் ஒரு மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் …கர்ப்பிணிகள்,முதியோருக்கு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை ..வெளிமாநிலத்தவர் வருகைக்கு தடை விதித்த காவல்துறை

What do you think?

மேளம் தாளம் முழங்க புஷ்பலதாவுக்கு வரவேற்பு – உழவற்கரையில் தீவிர வாக்கு சேகரிப்பு

மாநில அந்தஸ்து தருவது பற்றி பிரதமர் புதுச்சேரியில் பதில் தரவேண்டும் காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.