in

பார்த்திபனின் அதிரடி முடிவு! ‘No Caste, No Religion’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! மன்னிப்பு வீடியோ!

Watch – YouTube Click

தமிழ் சினிமாவோட ‘புதிய பாதை’ பார்த்திபன் சார், இப்போ ஒரு புதுப் பாதையில பயணிக்க ஆரம்பிச்சிருக்காரு.

சமீபத்துல ஹைதராபாத்ல நடந்த ஒரு பட விழாவில, “நான் ஒரு நாயுடு பையன், ஆனா சென்னையில வளர்ந்ததுனால எனக்கு தெலுங்கு அவ்வளவா வராது”ன்னு அவர் பேசின ஒரு விஷயம் இப்போ பெரிய சர்ச்சையாகிடுச்சு.

அவர் பேசினதுக்கு சோசியல் மீடியாவுல பயங்கரமான விமர்சனங்கள் வர ஆரம்பிச்சதும், உடனே பார்த்திபன் சார் அதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு விளக்கம் கொடுத்திருக்காரு:

“சாதியை தலைமேல வச்சு கொண்டாடுறவங்களை எனக்கே பிடிக்காது. என்னோட ‘இவன்’ போன்ற படங்கள்லயே சாதியைக் கண்டிச்சுப் பேசியிருக்கேன்.”

“தவறு நடந்துடுச்சுன்னு முழுமையா உணர்றேன். இவ்வளவு பேர் வருத்தப்படுறது எனக்கே பிடிக்கல”.

“நான் என் திறமையை மட்டும் தான் நம்புறேனே தவிர, சாதியை சொல்லி வயிறு வளர்க்கணும்னு என்னைக்குமே நினைச்சது இல்ல. இனிமே இப்படி ஒரு சின்னத் தப்பு கூட நடக்காது!”

அப்படின்னு ரொம்ப உருக்கமாப் பேசியிருக்காரு. மன்னிப்பு கேட்டதோட நிக்காம, இப்போ ஒரு பெரிய ஸ்டெப் எடுத்திருக்காரு பார்த்திபன். இது சம்பந்தமா அவர் ரிலீஸ் பண்ண வீடியோவுல சொன்ன விஷயம் தான் இப்போ ட்ரெண்டிங்:

“மனதளவில நான் ஏற்கனவே சாதி, மதம் இல்லாதவன் தான். ஆனா இப்போ ஒரு சோதனை வந்ததுனால, அரசாங்கத்துக்கிட்ட இருந்து ‘சாதி இல்லை, மதம் இல்லை’ (No Caste, No Religion) அப்படிங்கிற சான்றிதழை வாங்குறதுக்கு தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

சீக்கிரமே எனக்கு அந்த சர்டிபிகேட் கிடைச்சுடும், அதுக்கு முன்னாடி ஒரு அரசாணை (GO) வரும்னு எதிர்பார்க்கிறேன்”னு சொல்லியிருக்காரு.

தன்னோட பேச்சால வந்த சர்ச்சையை, ஒரு முன்னுதாரணமான செயலா மாத்த பார்த்திபன் எடுத்திருக்கிற இந்த முடிவு இப்போ சினிமா வட்டாரத்துல பெரிய பாராட்டைப் பெற்று வருது!

What do you think?

குக் வித்,சீசன் 7! வந்துட்டாங்க கோமாளிகள்!நடுவராக ரோஜா! ஜோடிகளுடன் லிஸ்ட் இதோ! இனி ஆட்டம் வேற லெவல்.

தளபதி விஜய் ஆசைப்பட்ட அந்த ஒரு ரோல்! அமைதிப்படை ரீ-ரிலீஸ்: -சத்யராஜ் சொன்ன சீக்ரெட் பேட்டி!