in

Campa Energy Drink விளம்பர வீடியோ!அஜித்தை கலாய்க்கும் ரசிகர்கள்!விளம்பரத்தை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்.

Watch – YouTube Click

தமிழ் சினிமாவோட ‘அல்டிமேட் ஸ்டார்அஜித்குமார் இப்போ ‘குட் பேட் அக்லி‘ படத்துக்கு அப்புறம் ஃபுல் அண்ட் ஃபுல் கார் ரேஸிங்ல தான் பிஸியா இருக்காரு.

‘அஜித்குமார் ரேஸிங்’னு சொந்தமா ஒரு டீம் ஆரம்பிச்சு, உலக லெவல்ல நடக்குற ரேஸ்ல கலந்துக்க ரெடி ஆயிட்டு இருக்காரு.

இந்த நேரத்துல தான் ஒரு பெரிய ‘சர்ப்ரைஸ்‘ நியூஸ் வந்துச்சு. ரிலையன்ஸ் நிறுவனத்தோட ‘கேம்பா எனர்ஜி(Campa Energy) ட்ரிங்க், அஜித் டீமோட அபிஷியல் பார்ட்னர்னு அறிவிச்சாங்க.

இதுக்காக ஒரு விளம்பரத்துலயும் தல அஜித் நடிச்சிருக்காரு. கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அப்புறம் அஜித் ஒரு கமர்ஷியல் விளம்பரத்துல நடிச்சிருக்காருன்னு சொன்னதும் சோசியல் மீடியாவே திருவிழா மாதிரி கொண்டாடுனாங்க.

அந்த விளம்பரம் இப்போ ரிலீஸ் ஆகிடுச்சு. ஆனா, எதிர்பார்த்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணுங்கிற கதையா ஆகிப்போச்சு!

ரேஸிங் பேக்கிரவுண்ட்ல உருவான அந்த விளம்பரத்துல அஜித்தோட லுக், எடிட்டிங் எல்லாம் கொஞ்சம் ‘சுமாராவே‘ இருக்குன்னு பேச்சு கிளம்பிருக்கு.

இதுல ஹைலைட் என்னன்னா, மத்த ஹீரோ ஃபேன்ஸ் கலாய்க்கிறதை விட அஜித்தோட தீவிர ரசிகர்களே இந்த விளம்பரத்தை வச்சு செஞ்சுட்டு இருக்காங்க.

எங்க தல-யை இன்னும் நல்லா காட்டியிருக்கலாம்“, “ஏதோ மொபைல் ஆப்ல எடிட் பண்ண மாதிரி இருக்கு”னு மீம்ஸ் போட்டு கிண்டலடிச்சு வர்றாங்க.

ஒரு சிலரோ, “தல-யை இவ்வளவு நாள் கழிச்சு விளம்பரத்துல பார்த்ததே போதும்”னு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.

எது எப்படியோ, ரொம்ப வருஷம் கழிச்சு விளம்பர உலகத்துல கால் பதிச்ச அஜித்துக்கு, ஆரம்பமே இந்த அளவுக்கு சோசியல் மீடியாவுல விவாதத்தை கிளப்பியிருக்கு!

What do you think?

மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் பங்குனி உத்திர விழா 

புவனகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா விமரிசையாக நடைபெற்றது