நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் திரையிட தடை…
விதிக்க கோரி காங்கிரஸ் தெற்கு தொகுதி சார்பில் செய்யது பாபு மாநில தேர்தல் ஆணையத்திற்க்கு மின் அஞ்சல்.
தமிழக்தில் சட்டமன்றத் தேர்தலில் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறையின் நடைமுறையில் உள்ளது வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
விஜய் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். எனவே தேர்தல் முடியும் வரை அவர் நடித்த திரைப்படங்கள் திரையிடுவதற்கும், புதிதாக ஜனநாயகன் படம் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
மேலும் இந்த படத்தின் டிரைலர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
விரைவில் திரைக்கு வருமென அனைத்து திரையரங்குகளிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும். மேலும் தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளிலும்,
தொலைக்காட்சிகளிலும் விஜய் நடித்த படம் திரையிட தடை.
விதிக்குமாறும்,மற்றும் விஜய் படம் போட்ட விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மதுரை தெற்கு தொகுதிபொறுப்பாளர் செய்யது பாபு.
மாண்புமிகு தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு, மின் அஞ்சல் மூலம் கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார்.


