தமிழகத்தில் நான்கு முனை போட்டி அல்ல அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டும்தான் இருமுனை போட்டி திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
மதுரை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா எழுதிய “மதுரை வளர்ச்சியில் என் பயணம் ,நீங்களும் தெரிந்து கொள்ளலாம்”, என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம், மாநில தகவல் தொழில் பிரிவு செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் மற்றும் பல்வேறு வர்த்தக பிரமுகர்கள் கல்வி நிலைய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது.”இந்த நூலை மதுரை தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த எடப்பாடியார் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த நூல் அறிமுகம் தற்போது நடைபெற்று வருகிறது இதில் நான் செய்த பணிகளையும், மக்களுக்கு தேவையான கோரிக்கை பற்றி நூலாக வெளியிட்டு உள்ளேன்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு கடிதங்களை நான் எழுதியுள்ளேன். அதற்காக உரிய பதிலை மத்திய அமைச்சர் எனக்கு அனுப்பினார்.
சசிகலாவை மதிப்பிற்குரியவர்களாக வைத்திருந்தோம். இப்போது சசிகலா எங்களுக்கு போட்டி இல்லை.

ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் நான்கு போட்டி என்று கூறுகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையான கூட்டணிக்கும் தான் இருமுனை போட்டி.
அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது
நாங்கள் எந்த உரிமையை விட்டுக் கொடுத்தோம் ? தமிழகத்தின் உரிமையை தான் பெற்று கொடுத்தோம்.
திமுகவிற்கு காரணம் கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள்.
தேசிய கட்சியோடு கூட்டணி தொகுதிப்பங்கீட்டை விரைந்து முடிக்க டெல்லி சென்றார் எடப்பாடியார் அதிமுகவின் கொள்கையை விட்டுக்கொடுக்கவே மாட்டார்.
காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து அதற்காக தீர்வு கண்டவர் எடப்பாடியார். திமுக போல ஒருபோதும் கொள்கைகளை நாங்கள் விட்டு கொடுத்தது கிடையாது .
நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை திமுக பதில் சொல்லவில்லை.
28 தொகுதியை கொடுத்துவிட்டு இன்றைக்கு திமுக காங்கிரஸுக்கு அடிபணிந்து விட்டது. அதிமுக இன்றைக்கு சுதந்திரமாக இயங்குகிறது என்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக தொடர்ந்து 5 ஆண்டுகள் இருந்திருந்தால் அதற்கு அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.அதே போன்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது.
மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்பொழுது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் தொழிற்சாலை உருவாக்கப்படும். அதேபோல மதுரை தூத்துக்தமிழகத்தில் வடசாலை உருவாக்கப்படும்”, என கூறினார்.

