in

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் சிவன் திருக்கோயில் தரமற்ற முறையில் கட்டுமான பணி – பக்தர்கள் அதிருப்தி.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் சிவன் திருக்கோயில் தரமற்ற முறையில் கட்டுமான பணி – பக்தர்கள் அதிருப்தி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் வட்டம் கள்ளப்புலியூர் கிராமத்தில் வண்டார குழலி உடனுறை அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இந்து கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த திருத்தலமாக அமைந்துள்ள சிவன் கோவில் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடி விழுந்து கோவிலில் உள்ள மூலவர் சன்னிதானம் மட்டும் பழுதடைந்த நிலையில் அப்பகுதி பக்தர்கள், பொதுமக்கள் கோவில் புனரமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டி அதிகாரிகள்,மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்து

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதுப்பிப்பு பணிகளுக்காக
சுமார் 2,கோடியே 26,இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்து கட்டுமான பணிக்கு அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் திருக்கோயில் பழுதுபார்த்தல்,மதில்சுவர் அமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைத்தல் போன்ற பணிகளை ஒப்பந்ததாரர் அன்பரசு ஸ்பதி செய்து வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்த காலம் 9 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், மேலும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகின்றன என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதுடன், பணிகள் தொழில்நுட்ப விதிமுறைகளை பின்பற்றாமல் தரமற்ற முறையில் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாகவும், தெரிவிக்கின்றனர்.

மேலும், கோயிலின் பாரம்பரிய தன்மை காக்கப்பட வேண்டிய நிலையில், அதனை பாதிக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன என்ற கவலையும் எழுந்துள்ளது.

மேலும் தரமற்ற முறையில் திருக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழாக்கள் நிறைவு பெற்று தரமற்ற முறையில் கட்டப்பட்ட பணிகளால் பிற்காலங்களில் பெரும் அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால் தெய்வ குற்றம் என தப்பித்துக் கொள்ளும் ஒப்பந்ததாரர்.

அலுவலகத்துறை அதிகாள், தரமாகரிக கட்ட வேண்டும்,ஒப்பந்தத்தில் அளித்த விதிமுறைகளின் படி சுண்ணாம்பு கடுக்கா நீர் போன்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பணி நடைபெற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமான பணிகள் நடைபெற உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் சமயம் என்பதால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணியை நிறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து வரும் ஆட்சியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் அளிப்பார்களா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

What do you think?

அரசுக்கு சொந்தமான மகளிர் சுய உதவி குழு கல்குவாரி செயல்பட தடையால் – 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிப்பு.