புதுச்சேரி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வாக்கு சேகரிப்பு துவங்கினார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
புதுச்சேரிக்கு தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடாத நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் கடந்த முறை போட்டியிட்ட மண்ணாடிப்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஏதுவாக இன்று தனது வாக்கு சேகரிப்பு துவங்கினார்.
தொகுதிக்குட்பட்ட லிங்காரெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள கோயிலில் வாக்கு சேகரிக்கும் நோட்டீஸனை படையல் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்.
தேர்தல் தேதி முன்னமே அறிவிக்கப்பட்டு விட்டதால் இன்றே தனது வாக்கு சேகரிப்பை துவங்க இருப்பதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் கூறினார்.
நல்லாட்சி தொடரட்டும்.புதுவை மலரட்டும் என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக நமச்சிவாயம்.தெரிவித்தார்.


