கும்பகோணத்தில் அரசினர் கலைக்கல்லூரியில் பசுமை முகப்பு திறப்பு விழா
கும்பகோணத்தில் அரசினர் கலைக்கல்லூரியில் பசுமை முகப்பு விழா மற்றும் முன்னை மாணாக்கர் சங்கம் தொடக்க விழா கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள் போரச்சியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், கலந்து கொண்டு முன்னை மாணாக்கர் சங்கத்தை தொடக்கி வைத்து பேசுகையில் இந்த கல்லூரி 167 ஆண்டுகள் தொன்மையான கல்லூரி மொத்தம் 17 துறைகள் உள்ளன.
இவற்றில் 12 துறைகளில் ஆய்வுத்துறைகளும் உள்ளது என்பது பெருமைக்குரியது, இந்த கல்லூரியில் வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி, கணிதமேதை ராமானுஜன், தமிழ்தாத்தா உவேச, தென்கச்சி கோ சுவாமிநாதன், இந்து கஸ்தூரிரங்கன், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் முன்னாள் இந்நாள் மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் என பலர் கல்வி பயின்ற சிறப்பும் கொண்ட இக்கல்லூரியில் தான், நானும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் படித்தோம், இந்த கல்லூரியில் படித்து நான் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இதுவரை உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்கள் இந்த கல்லூரிக்கு எதுவும் செய்யவில்லை என்று தனது மனக்குமரலை வெளிப்படுத்தி முன்னை மாணாக்கர் சங்கத்தில் சேர்வதில் பெருமை கொள்கிறேன்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கெளரவ விரிவுரையாளர்கள் ஊதியம் 15,000 இருந்த ஊதியம் தற்போது படிப்படியாக உயர்ந்து 30,000 வழங்கியது திமுக அரசுதான் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தால் கெளரவ விரிவுரையாளர்களுக்கு இன்னும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


