கொடி நாள் நிதியாக ரூபாய் 69 ஆயிரத்து 470 திரட்டிய ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் அசத்தல்.
புதுச்சேரி காராமணி குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேசிய மாணவர் படையின் விமானப்படை பிரிவில் உள்ள இளநிலை (JD) NCC மாணவர்கள் கொடிநாள் நிதி திரட்டும் முகாம் மூலம் திரட்டப்பட்ட நிதியை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது..
இதில் கொடி நாள் நிதியாக ரூபாய் 69 ஆயிரத்து 470 திரட்டிய ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் அசத்தினார்கள்..
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் நலத்துறையில் உள்ள இந்திய விமானப்படையின் Retd. சார்ஜன்ட் G. சுந்தரம், நலத்துறை ஒருங்கிணைப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளியின் முதல்வர் திரு கேசவ் அவர்கள் தலைமை ஏற்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஆண்டனி ஸ்டெல்லா அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் தேசிய மாணவர் படையின் அதிகாரி திரு பத்மநாபன் அவர்கள் வரவேற்புரை வழங்கி, கொடிநாள் அறிக்கையை வாசித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் நிதி, கொடிநாள்யின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
விழாவின் கடைசி நிகழ்வாக தேசிய மாணவர் படை மாணவர்கள் திரட்டிய நிதியான ரூபாய் 69,470 -க்கான காசோலையானது பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி கண்காணிப்பாளர் முன்னிலையில் சிறப்பு விருந்தினிடம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


