வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் செங்கம்-போளூர் மாநில நெடுஞ்சாலையில் சோழவரம் பகுதியில் உள்ள ஆற்று பாலத்திற்கு அடியில் தனியாக நடந்து சென்றிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞரை அவ்வழியைச் சென்ற வாகன ஓட்டிகள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தினசரி வேலைக்கு சென்று வழக்கம் போல் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் சதீஷ்குமாரை(21) வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் கடந்த நான்கு நாட்களாக இதே நேரத்தில் அந்தப் பகுதியில் நடந்தே வீட்டுக்கு செல்வதை நோட்டமிட்டக இன்று அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


