in

துணை முதல்வர் வருகையொட்டி நகர செயற்குழு கூட்டம்…

துணை முதல்வர் வருகையொட்டி நகர செயற்குழு கூட்டம்… 

நாளை விருத்தாசலம் வருகை தர உள்ள தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு,கடலூர் மாவட்டம், விருத்தாசலம் திமுக நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில்,தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்று,துணை முதல்வர் வருகை மற்றும் அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும்,வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏராளமாக பங்கேற்க வேண்டுமென எடுத்துரைத்துப் பேசினார்.

இக்கூட்டத்தில் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ்,நகர செயலாளர் தண்டபாணி,நகரத் துணைச் செயலாளர் ராமு,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் குமார்,சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையாளர் ,ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி மற்றும் 33 வார்டுகளை சேர்ந்த வட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

What do you think?

பார்த்திபனைப் பிரித்து மேய்ந்த த்ரிஷா! விஜய் – த்ரிஷா விவகாரம், என்ன நடந்தது? தக்க பதிலடி!

புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத் திணை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்….