புதுச்சேரியிலும் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம்...
ஓரிரு நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக புதுச்சேரியில் வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே தாங்கும். இதனால் ஹோட்டல்களுக்கு வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது..
புதுச்சேரியில் 700க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.இவற்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் நான்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் நாளை முதல் படிப்படியாக ஹோட்டல்கள் மூடப்படும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.


