in

புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி மண்டகப்படி திருவிழா நடைபெற்றது

புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி மண்டகப்படி திருவிழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் சுவாமி   மண்டகப்படி திருவிழா புவனகிரியில் உள்ள பாண்டுரங்கர் பஜனை மடத்தில் நடைபெற்றது . புவனகிரி வர்த்தக சங்கம் சார்பில் சுவாமிக்கு பாரம்பரிய முறை வரவேற்பு அளிக்கப்பட்டது

ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூவராக பெருமாள் சுவாமி ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு கிள்ளை கடற்கரைக்கே தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம் அப்படி தீர்த்தவாரிக்கு செல்லும் ஸ்ரீ பூவராக பெருமாள் புவனகிரிக்கு வருகை புரிந்து நான்கு நாட்கள் பல்வேறு வழிபாட்டாளர்கள் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு இடங்களில் தங்கி இருந்து அருள் பாலிப்பார் .

இந்நிலையில் அதி சிறப்பு வாய்ந்த இறுதி நாளான 9 -3-26 புவனகிரி வர்த்தக சங்கம் சார்பில் மண்டகப்படி என்னும் சிறப்பு வரவேற்பு வழிபாட்டு நிகழ்ச்சி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் நடைபெற்றது .

ஸ்ரீபூவராகப் பெருமாளுக்கு வாசனை திரவியங்கள், கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்து பூவராகப் பெருமாள் அருளாசிகளை வழங்கினார்.

இந்த விழாவை காணவும், ஸ்ரீ பூவராக பெருமாளை தரிசனம் செய்யவும் சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் முடிவில் புவனகிரி வர்த்தக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பூவராக சுவாமி ஆலயத்தார் சார்பில் மரியாதை செய்யப்பட்டது .

மேலும் இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பணியை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு ஆலய நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது .

What do you think?

கும்பகோணத்தில் பாரத பிரதமர் வருவதையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஐந்து வருடமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மூஞ்சான் கிராம மக்கள்