‘துரந்தர் 2’ (Dhurandhar: The Revenge) மார்ச் 19-ஆம் தேதி ரிலீஸ்
பாலிவுட் எனர்ஜி ஸ்டார் ரன்வீர் சிங் நடிச்சு மிரட்டிய ‘துரந்தர்’ படத்தோட முதல் பாகம், உலகம் முழுக்க சுமார் 1,300 கோடி ரூபாய் வசூல் செஞ்சு இந்திய சினிமாவையே ஆச்சரியப்பட வச்சது.
இப்போ அந்தப் படத்தோட இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’ (Dhurandhar: The Revenge) ஹிந்தி ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவுல காட்டுத்தீ மாதிரி பரவிட்டு வருது!
ஹிந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, வர்ற மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகுது.
ஆதித்யா தார் இயக்கத்துல உருவான இந்தப் படத்துல ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குப் போற ‘ஸ்பை’ (Spy) கேரக்டர்ல வர்றாரு.
அவருக்கு வில்லனா அக்ஷய் கண்ணா நடிச்சிருக்காரு. இவங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் தான் படத்துக்கே பெரிய பலம்!
இந்த ரெண்டாவது பாகத்துல ரன்வீர் கூட நம்ம மாதவன், சஞ்சய் தத், ரவி ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன்னு ஒரு பெரிய டீமே நடிச்சிருக்காங்க. முதல் பாகம் இந்தியா – பாகிஸ்தான் அரசியல் பின்னணியில இருந்ததால சில விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் மத்தியில பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பத்தின இன்னொரு ‘ஷாக்’ நியூஸ் என்னன்னா, முதல் பாகமே 3 மணி நேரம் 34 நிமிஷம் ஓடின படம். ஆனா, இந்த ரெண்டாவது பாகம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இருக்கும்னு தகவல்கள் வெளியாகி இருக்கு.
இப்போ ரிலீஸ் ஆகியிருக்கிற ட்ரெய்லரே 3 நிமிஷம் 26 செகண்ட் ஓடுறதால, கண்டிப்பா படம் 3.30 மணி நேரத்தைத் தாண்டும்னு ரசிகர்கள் பேசிக்கிறாங்க. “என்னது.. 4 மணி நேரமா?
அப்போ தியேட்டர்லயே குடி இருக்க வேண்டியதுதான்!”னு ரசிகர்கள் ஜாலியா கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.