த்ரிஷாவுடன் கெத்தாக வந்திறங்கிய விஜய் – ‘ஷாக்’ கொடுத்த தளபதி! பற்றி எரியும் இணையம்!
நேத்து சென்னை சினிமா வட்டாரமே ஏஜிஎஸ் (AGS) குரூப் வீட்டு கல்யாணத்துல தான் இருந்துச்சு.
ஆனா, அங்க நடந்த கல்யாணத்தை விட, நம்ம தளபதி விஜய்யும், த்ரிஷாவும் ஒன்னா வந்து இறங்குனது தான் இப்போ இன்டர்நெட் முழுக்க பயங்கர விவாதமா ஓடிக்கிட்டு இருக்கு.
கல்யாண மண்டபத்துக்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே கார்ல ஒன்னா வந்து இறங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்ற வீடியோவும், போட்டோக்களும் இப்போ காட்டுத்தீ மாதிரி பரவிட்டு வருது.
மண்டபத்துக்குள்ள போனதும் ஜோடியாவே போய் மணமக்களை வாழ்த்திட்டு, அங்க இருந்த மத்த பிரபலங்கள் கூடவும் சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காங்க.
குறிப்பா, ரெண்டு பேரும் அருகருகே நின்னு சிரிச்சபடி போஸ் கொடுத்த போட்டோக்கள் தான் இப்போ “டாக் ஆஃப் தி டவுன்”.
ஏற்கனவே விஜய் – சங்கீதா விவாகரத்து மேட்டர் பத்தி சோசியல் மீடியாவுல ஏகப்பட்ட வதந்திகள் ஓடிட்டு இருக்கு. சங்கீதா தரப்புல இருந்து சில குற்றச்சாட்டுகள் வந்ததா சொல்லப்படுற இந்த நேரத்துல, விஜய் இப்படி த்ரிஷா கூட பொது நிகழ்ச்சியில கலந்துகிட்டது பல கேள்விகளை எழுப்பிருக்கு.
நடிகை சனம் செட்டி, அரசியல் விமர்சகர் சண்முகம் முத்துசாமி, தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் போன்றவங்க இந்த விஷயத்தை அவங்க சோசியல் மீடியா பக்கங்கள்ல விமர்சனம் செஞ்சிருக்காங்க.
சிலர் இது தப்புன்னும், சிலர் இதையெல்லாம் ஒரு விஷயமா பேசுறதே வேஸ்ட்ன்னும் மாத்தி மாத்தி கருத்து சொல்றாங்க.
“ஒரு நடிகன் தன் தோழி கூட கல்யாணத்துக்கு வர்றதுல என்ன தப்பு? இதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடுறீங்க?”னு விஜய் ரசிகர்கள் பயங்கரமா சண்டைக்கு நிக்கிறாங்க.
“தேவையில்லாத வதந்திகளைப் பரப்பாதீங்க”னு சொல்லி விமர்சனம் செய்றவங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துட்டு வர்றாங்க.
இந்த விவகாரம் இப்போ யூடியூப் சேனல்கள்லயும், எக்ஸ் (Twitter) தளத்துலயும் செம சூடா விவாதிக்கப்பட்டு வருது.
ஆனா, விஜய் தரப்புல இருந்தோ இல்ல த்ரிஷா தரப்புல இருந்தோ இதுக்கு எந்த ஒரு விளக்கமும் வரல. இது வெறும் ஒரு சாதாரண சோசியல் மீட்டிங் தானா? இல்ல இதுக்கு பின்னாடி வேற ஏதும் இருக்கான்னு ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு கதையை கிளப்பி விட்டுட்டு இருக்காங்க.
எது எப்படியோ, ஒரு கல்யாண விசேஷத்துல எடுத்த போட்டோ இவ்வளவு பெரிய சர்ச்சையாகும்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!


