in

பாதுகாப்பாற்ற முறையில் சாலையில் வாகனங்களில் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்

பாதுகாப்பாற்ற முறையில் சாலையில் வாகனங்களில் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி புறவழிச் சாலை அமைந்துள்ளது.இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இந்த புறவழிச்சாலையின் அருகே மூன்று தனியார் பள்ளிகளும்,இரண்டு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.இந்த புறவழிச் சாலையில் செஞ்சி மாநகருக்கு செல்லும் இணைப்புச் சாலை வழியாக நாள்தோறும் இப்பள்ளிக்கு மாணவர்கள் காலை, மாலை என இரு முறை சென்று வர
இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த புறவழிச் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் சென்று வரும் நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் காலை மாலை இரு வேலைகளில் தடுப்பு (பேரிகார்டு) வைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் எனவும், மேலும் பெரும் விபத்தை தவிர்க்க காலை மாலை இருவேளைகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும், அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் குறிப்பாக மாதங்கள் தோறும் நடைபெறும் திருவண்ணாமலை பௌர்ணமி தினத்திலும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அம்மாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவிற்கும் மேலும் ஆண்டுகள் தோறும் திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் .

தீப திருவிழாவிற்கும் ,மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் 13 -நாள் நடைபெறும் மாசி திருவிழாவிற்கும் இவ் வழியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலையும்,மேலும் இப்பகுதியில் இருள் சூழ்ந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ளதால் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்