in

ரஜினி-கமல் கூட்டணி படத்தோட ப்ரோமோ வீடியோ

ரஜினி-கமல் கூட்டணி படத்தோட ப்ரோமோ வீடியோ

 

தலைவரோட டைரி இப்போ ரொம்ப பிஸி போல! வரிசையா அடுத்தடுத்த படங்களோட அறிவிப்பு வந்து, சோஷியல் மீடியாவே இப்போ ‘ரஜினி.. ரஜினி..’னுதான் கத்திக்கிட்டு இருக்கு.

அப்படி என்ன மேட்டர்னு கேக்குறியா? முதல்ல நம்ம நெல்சன் டைரக்ஷன்ல உருவான ‘ஜெயிலர் 2’ பத்திதான் பெரிய பேச்சே போயிட்டு இருக்கு.

முதல் பார்ட் பண்ணுன வசூல் வேட்டை எல்லாருக்கும் தெரியும்ல? இப்போ பார்ட் 2 படப்பிடிப்பு முடிஞ்சு, எடிட்டிங், மியூசிக்னு போஸ்ட் புரொடக்ஷன் வேலைங்க செம ஸ்பீடா நடக்குதாம்.

ரிலீஸ் டேட் இன்னும் சொல்லல, ஆனா தலைவன் வர்றது மட்டும் உறுதி! ஜெயிலர் 2 முடிஞ்ச கையோடு, தலைவர் அவரோட 173-வது படத்துக்கு ரெடியாகிட்டாரு. இதை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்கப்போறாரு.

இதுல செம ட்விஸ்ட் என்னன்னா, இந்தப் படத்தை நம்ம உலகநாயகன் கமல் ஹாசன் தான் தயாரிக்கிறாரு! பல வருஷம் கழிச்சு இவங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு புராஜெக்ட்ல ஒண்ணா சேர்றதுதான் இப்போ கோலிவுட்டோட டாக் ஆஃப் தி டவுன்.

இதுக்கு நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான் மியூசிக் கூடவே, இந்த படத்துல பிரியங்கா மோகன், பூஜா ஹெக்டேனு ரெண்டு முன்னணி ஹீரோயின்ஸ் நடிக்கப்போறதா பேச்சு அடிபடுது.

பூஜா ஹெக்டே ஏற்கனவே ‘கூலி’ படத்துல ஒரு பாட்டுக்கு வந்துட்டு போனாங்க, இப்போ முழு படத்துல நடிக்கப்போறாங்க போல!

ரஜினி 173-க்கு அப்புறம், ரஜினியும் கமலும் சேர்ந்து ஒரே படத்துல நடிக்கப் போறாங்களாம். அதுதான் தலைவரோட 174-வது படம்.

இதையும் நெல்சன் தான் டைரக்ட் பண்ணப்போறாராம், உதயநிதி ஸ்டாலினோட ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கப் போறதா தகவல் வந்துருக்கு.

இந்த ரஜினி-கமல் கூட்டணி படத்தோட ப்ரோமோ வீடியோ இன்னைக்கு ரிலீஸ் ஆயிருக்கு வீடியோவை பார்த்த ரசிகர்கள் படம் எப்ப வரும்னு ஆர்வமா இருக்காங்க ஆனா இந்திய திரையுலகமே அதிரப்போகுதுன்னு மட்டும் புரியுது.

மொத்தத்துல பாத்தா, தலைவர் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு ஃபேன்ஸை சும்மா அலற விடப்போறாரு!”

What do you think?

‘ஒருத்தரோட பெர்சனல் லைஃப் மதிக்கக் கத்துக்கோங்கடா’ – மீனா

நாமக்கல் மோகனூர் ராகவேந்திரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு