‘டாக்ஸிக்’ மார்ச் 19-ஆம் தேதி ரிலீஸ்
“என்னப்பா விஷயம் தெரியுமா? நம்ம KGF ஸ்டார் யாஷ் ஓட அடுத்த படம் ‘டாக்ஸிக்’ (Toxic) பத்திதான் இப்போ சோஷியல் மீடியாவே பேசிட்டு இருக்கு.
மனுஷன் பிரசாந்த் நீல் கூட சேர்ந்து ‘கே.ஜி.எஃப்’ 1, 2-ன்னு போட்டு பொளந்து கட்டினாருல? அதுக்கப்புறம் இந்தியா முழுக்க அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஆகிட்டாங்க.
இப்போ கீது மோகன்தாஸ் டைரக்ஷன்ல இந்த ‘டாக்ஸிக்’ படத்துல நடிச்சுட்டு இருக்காரு. இது ஒரு தரமான கேங்ஸ்டர் டிராமா படமாம்.
முதல்ல யாஷோட 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு டீசர் விட்டாங்க பாரு… அதுலயே செம வன்முறை, அதிரடின்னு ஃபேன்ஸ் மத்தியில பெரிய விவாதமே கிளம்பிடுச்சு.
‘என்னப்பா இவ்ளோ வயலன்ஸ் இருக்கு’ன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. ஆனா, இப்போ லேட்டஸ்ட்டா ரெண்டாவது டீசர் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க. அதுல ரத்தம் தெரிக்கிற மாதிரி பயங்கரமான சண்டைக்காட்சிகள் இருக்கு. இதைப் பார்த்த யாஷ் ஃபேன்ஸ் எல்லாம் இப்போ செம குஷியில இருக்காங்க. இந்த படத்துல காஸ்டிங் ரொம்ப பெருசுப்பா!
நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருக்காங்க. ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷின்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க.
KVN நிறுவனம் தான் இந்த பிரம்மாண்டமான படத்தை தயாரிக்குது. படம் வர்ற மார்ச் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்னு சொல்லிருக்காங்க.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு எல்லா மொழியிலயும் படம் வரப்போகுது.+
KGF-க்கு அப்புறம் யாஷ் வர்றதால, இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ல என்னென்ன சாதனைகளை உடைக்கப்போகுதுன்னு எல்லாரும் வெயிட் பண்ணி பாக்குறாங்க. மொத்தத்துல, தியேட்டர்ல ரத்தம் தெறிக்கப்போகுதுன்னு மட்டும் புரியுது!”