வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) -ன் 9 -அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) -ன் 9 -அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் 150 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் 9 -அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு சங்க ஒருங்கினைப்பாளர் தென்னரசு தலைமை வகித்தார்.
மறியல் போராட்டத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை, மற்றும் நில அளவை துறையில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பிட கோரியும், இத்துறையில் அனைத்து நிலையிலேயும் பணியாற்றும் வெளி முகமை, ஒப்பந்த தற்காலிக மற்றும் தொகுப்பூதியத்தில் பணி நியமனங்களை கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர பணியிடமாக நிரப்புவது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு மறியல் போராட்டம் செய்தனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கு மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு காணப்பட்டது.

