in

பழனியில் தைப்பூசத் திருவிழா எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழனியில் தைப்பூசத் திருவிழா எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள்

 

பழனி மலை கோயிலுக்கு எடப்பாடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த ஐன26ஆம் தேதி துவங்கி பிப்4 ஆம் தேதி நிறைவு பெற்றது.

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற பின்பு வருவது எடப்பாடி பருவத ராஜகுல மகாஜன காவடியாகும்.

எடப்பாடி, சின்ன மணலி, புதூர், வெல்லாண்டி வலசு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளன்று காவடி எடுத்து குவிவது வழக்கம்.

இவர்களுக்காக நேற்று பழனி கோயிலில் சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் இவர்களாலே தயாரிக்கப்பட்டது.

இன்று சண்முக நதியில் மற்றும் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழனிக்கு கிளம்பியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் மயில் காவடி, இளநீர் காவடி என எடுத்து வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் போக்குவரத்தை வேறு வழிகளில் மாற்றி விட்டனர். இவர்கள் இன்று மலைக்கோயிலில் இரவு தங்குவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

செல்லாண்டியம்மன் கோவில் மாசித் திருவிழா

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழா சுங்க வரி கட்டணம் வசூல் ஏலம்