in

சினிமாவில் பார்ப்பது வேறு அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

சினிமாவில் பார்ப்பது வேறு அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழ்நாடு தலைகுனியாது என்ற பிரச்சார பயணத்தை பிப்ரவரி 1ஆம் தேதி    தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 23 தலைமை நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று அத்தகுதி மக்களிடம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

நிலையில் இன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது நாடாளுமன்ற உறுப்பினர் என் வி என் எஸ் கனிமொழி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நட்சத்திர பரப்புரையாளராக கலந்துகொண்டு நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் மனுக்களை பெற்று கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி தேர்தல் பார்வையாளர் சண்முனியாண்டி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரையில் 23 நட்சத்திர பரப்புரையாளர்கள் 234 சட்டமன்ற தொகுதிக்கும் சென்று மக்களின் நிறை குறைகளை கேட்டு அறிகிறார்கள்.

தமிழ்நாடு பரப்புரையில் இன்று தமிழ்நாடு கலந்தாய்வு கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். நான்கரை ஆண்டு காலங்கள் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் குறித்தும் மக்கள் கூறிய கருத்துக்களை எடுத்துக் கொண்டுள்ளோம்.

கட்சியை ஆரம்பிப்பதற்கு எப்படி அனைவருக்கும் உரிமை உள்ளதோ அந்த கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை உள்ளது. இதுவரை தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று மக்களிடம் விஜய் பேசி உள்ளார்.

ஆனால் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து தெளிவாக விளக்கவில்லை. மக்களுக்கு பல திட்டங்களை செய்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல போகிறேன் என இதுவரை கூறவில்லை.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அறிவித்து வருகிறார். ஆனால் அவர்களிடம் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது கூட இல்லாமல் உள்ள நிலையில் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

நமக்காக என்ன செய்கிறார்கள் என இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். சினிமா பார்ப்பது வேறு அரசியல் வேறு என்பதை சிந்திக்க வேண்டும். நல்ல கொள்கைகளை தெரிவித்தால் நாங்களும் வரவேற்போம். மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பேரிடர் கால நிதி, வளர்ச்சி திட்டங்கள் என எதுவும் கொடுக்காமல் .

தமிழ்நாட்டை இரண்டாம் பட்சமாக நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு ஒருமுறை தவெக தலைவர் விஜய் வாய்திருந்து எதிர்த்து பேசவில்லை. ஆட்சியில் பங்கு கொடுப்பது தொடர்பாக தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். இரு கட்சி தலைவர்களும் பேசிக் கொள்ளும் பொழுது கட்சியினர் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என கூறினார்.

What do you think?

11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் முதல் அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

கும்பகோணம் அருகே  அருள்மிகு ஶ்ரீ தேவி, பூதேவி ஸ்மேத வெங்கடாசலபதி சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.