தனி ஒரு மனிதராக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் உலக பிரசித்தி பெற்ற பர்வத மலை அமைந்துள்ளது.

இந்த மலையின் உச்சியில் அருள்மிகு ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிவ பக்தர் ஒருவர் மது ஒழிப்பு விழிப்புணர்வு பாத யாத்திரையாக பர்வத மலைக்கு செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம் நான்கு நாட்கள் நடை பயணமாக வந்த சம்பவம் சிவ பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் தனது முதுகுக்குப் பின்னால் பையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பாத யாத்திரை என்று வாசகம் எழுதப்பட்ட பதாகை ஏந்தியவாறு கையில் ஒரு சிவன் கொடியை ஏந்தியும் மதுராந்தத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் இந்த பாத யாத்திரை மேற்கொண்ட சம்பவம் தற்போது பர்வத மலைக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


