பாஜக உறுப்பினர் தொழிலதிபர் ஏழுமலைக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
செஞ்சி அருகே பாஜக உறுப்பினர் தொழிலதிபர் ஏழுமலைக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கல்லடி குப்பம் கிராமத்தில் வசித்து வரும் பாஜக பிரமுகர் மற்றும் முன்னாள் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை நண்பருக்கு சொந்தமான இடங்களில் அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் ஏழுமலைக்கு சொந்தமான வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் சொந்த கிராமமான கல்லடி குப்பம் கிராமம் மற்றும் செஞ்சியில் அமைந்துள்ள திரையரங்கு, திருமண்டபம் மற்றும் நாட்டார்மங்கலம் பகுதியில் ஏழுமலை மகனுக்கு மகன் ஆனந்தராஜிக்கு சொந்தமான அலுவலகத்திலும் அதிகாலை முதல் 7 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


