in

குடியிருப்பு பகுதியில் ரெஸ்ட்ரோ பாரை அனுமதிக்க கூடாது என ஆவேசம்…

குடியிருப்பு பகுதியில் ரெஸ்ட்ரோ பாரை அனுமதிக்க கூடாது என ஆவேசம்…

புதுச்சேரி எல்லை பகுதிகளான மதகடிப்பட்டு, கன்னியகோவில், கனகசெட்டிகுளம், திருக்கனுார் பகுதியில் மதுக்கடைகள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த பலர் மது அருந்தி செல்வது வழக்கம்.

காலாப்பட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலங்குப்பம் எல்லை பகுதியில் ரெஸ்ட்ரோ பார் உள்ளது. இங்கு இரு தினங்களுக்கு முன் நடந்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியும், கொலை செய்யப்பட்டவரும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் ஆலங்குப்பம் குடியிருப்பு பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.ரெஸ்டோ பார் என்ற பெயரில் மதுபான விற்பனை அங்கு நடைபெறுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுக்கிறது. உடனடியாக மது விற்பனை நிறுத்தவுடன் ரெஸ்ட்டோபருக்கான அனுமதி ரத்து செய்ய வேண்டும்என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு வலுசேர்க்கும் வகைல் பொதுமக்களுடன், தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அங்கு துணை ஆணையர் மேத்யூவிடம் மதுக்கடையை அகற்றக்கோரி வாக்குவாதம் செய்தார்.

தற்பொழுது கொலை நடந்துள்ள ரெஸ்டோ பார் ஏற்கனவே விதிமுறைகளை மீறியதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராத விதிக்கப்பட்ட மூடப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்டு நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ரெஸ்ட்டோபார் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்று துணை ஆணையர் தெரிவித்தார்.

இதே போல் புதுச்சேரியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகள் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார் ..

What do you think?

சென்சார் சர்டிபிகேட் வாங்க  வெறும் 18 வேலை நாட்கள் தான்

பிரதமர் மோடியையே மாத்துவேன்’! நடிகர் கிஷோர்… ‘ஷாக்’ பேட்டி!