ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவ திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி பெருமாள் கோயில்களில் முதலாவது கோயிலாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்,
ஆண்டுதோறும் தை மாதம் தைத் திருவிழா 12 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவத்திற்கான குடியேற்றம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி கள்ளபிரான் கொடி மரம் சுற்றி புறப்பாடும் மாலையில் தோளிக்கினியானில் மாடவீதி வீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
வருகிற 28ம் தேதி இரவு கருடசேவை நடைபெற்றது. சிகர நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான் திருப்புளியங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வலம் வந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வை முன்னிட்டு செவ்வாய்க் கிழமை இரவு கள்ளபிரான் சுவாமி தயார்களுடன் தெப்பத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


