in

தருமபுரத்தில் சாய் ஆரோக்கிய தருமை ஆதீனம் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா.

தருமபுரத்தில் சாய் ஆரோக்கிய தருமை ஆதீனம் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் தருமை ஆதினம் அமைந்துள்ளது.இங்கு 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் 60-ம் ஆண்டு மணிவிழாவில் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாயி கலந்து கொண்டார் .

அப்போது தருமை ஆதின குருமகா சன்னிதானத்தின் வேண்டுகோளை ஏற்று மயிலாடுதுறையில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க முடிவு மேற்கொண்டார் அதன்படி இன்று மயிலாடுதுறை தருமை ஆதின வனதுர்க்கை ஆலய வளாகத்தில் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

 

விழாவுக்கு தருமை ஆதின 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரியா சுவாமிகள் தலைமையில் ஒரே உலகம் ஒரே குடும்பம் உலக மனிதாபிமான இயக்க நிறுவனர் ஸ்ரீ சத்திய சாய் மனிதவள சிறப்பு பல்கலைக்கழக வேந்தர் சத்குரு மதுசூதன் சாயி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார் .

பின்னர் அவர் பேசுகையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதனை பின் பற்றுகிறேன் அதைதான் தருமை ஆதினம் கடைபிடித்து வருகிறது அதைதான் சாய்பாபா சொல்வார்.இலவச மருத்துவத்தை 1990ல் செய்துகாட்டியவர்.2011ல் ஆதரவற்ற 1 கோடி குழந்தைகள் உணவு பெற்று வருகிறார்கள்.

அது உலகம் முழுவதும் தன்னெற்ற சேவை மூலம் நடைபெறுகிறது.தருமை ஆதின செயலை 3 முறை பார்த்துவருகிறேன்.அவரே கடவுளின் சொருபம்.அவரின் பிறந்தநாள் வேண்டுகோள் அது ஆண்டாட்டு காலம் நிலைத்திருக்க வேண்டும் இன்னும் 9 மாதத்தில் மருத்துவமனை சேவை தொடங்கி குழந்தை பிறக்கும் ஆதின செங்கோலை ஏந்தி இந்த மருத்துவமனை தொடங்கும் அடுத்த நவம்பர் மாதம் இந்த துவக்க விழாவுக்கு மீண்டும் வருவேன்.

 

இங்குள்ள மக்களுக்கு 1 ரூபாய் செலவு கிடையாது மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை துவங்கபடும்.அன்பே சிவன் என ஆதினமே அருளி உள்ளார் இந்த நிகழ்ச்சியில் ஆதீன ஸ்ரீமத் கட்டளை தம்பிரான் சுவாமிகள்,சீர்காழி மார்க்கோனி பவுண்டேஷன் மார்க்கோனி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What do you think?

கழிவுநீர் கால்வாய் தீ பற்றி எரிந்ததால் கரும்புகை….. வாகன ஓட்டிகள் அவதி….

திருக்குறுங்குடி ஸ்ரீதிருமலை நம்பி (மலை நம்பி) தெப்ப உற்சவம்