in

ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் தை மாத விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம்

 ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் தை மாத விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தை மாதத்தை முன்னிட்டு ஆலயத்தில் நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது .

 

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ செல்லியம்மன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண ஆடைகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, ஊஞ்சல் மண்டபத்தின் முன்பாக உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அம்மன் முன்பாக பம்பை மேளதாளம் முழங்க காளியாட்டம் துள்ளாட்டமாக நடைபெற்றது. ஸ்ரீ செல்லியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டு பக்தர்கள் மெய்சிலிர்க்க ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெற்றது .

இந்த ஊஞ்சல் உற்சவத்தினை காண கிராம மக்கள், பக்தர்கள் என பெருந்திரளாக பங்கேற்று ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தி மையமாய் அருளாசி வழங்கும் ஸ்ரீ செல்லியம்மன் வணங்கி வழிபாடு செய்தனர். பின்னர் கோவில் பிரசாதம் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

What do you think?

1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவில் வருஷாபிஷேகம்

பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து சோதனை மாவட்ட ஆட்சியர் தள ஆய்வு