குறிஞ்சிப்பாடி அருகே எட்டு கிராம பொதுமக்கள் அகண்டம் எடுத்து வழிபடும் வினோத திருவிழா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிபேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு சியாண்டவர் கோயிலில் எட்டு ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் நடத்தும் லட்சதீப திருவிழா நடைபெற்றது.
மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை, விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், கீழூர், பெரியகோவில்குப்பம், ஆயிப்பேட்டை ஆகிய எட்டு ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் இந்த வினோத திருவிழாவில்

தைப்பூச திருவிழா முடிந்த மறுநாள் இக்கோயிலில் கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரும் எண்ணெயை மண்சட்டியில் ஊற்றி
பூஜை செய்து அகண்டம் என்று சொல்லப்படும்
அதனை தீபமாக முருகர் வேடமிட்டு கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக மேளதாளங்களுடன் எடுத்து வந்து கோவில் கர்ப்ப கிரகத்தில் உள்ள சியாண்டவருக்கு தீபமாக ஏற்றுகின்றனர்.

இதில் எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தோடு
முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன்
கோவிலில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.


