in

சிதம்பரத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி, இளஞ்சிறார் உள்ளிட்ட 7 பேர் கைது.

சிதம்பரத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி, இளஞ்சிறார் உள்ளிட்ட 7 பேர் கைது

சிதம்பரம் சுற்று வட்டார பகுதியில் குட்கா விற்பனையை தடை செய்யும் பொருட்டு கடலூர் எஸ்பி ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் அறிவுரையின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் இன்று சிதம்பரம் மந்தகரை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் இரண்டு வெள்ளை நிற மூட்டைகளை எடுத்து வந்த இருவரை சந்தேகப்பட்டு விசாரித்தனர். அதில் ஒருவர் சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த அஜய்குமார் (30) என்பதும், மற்றொருவர் சிதம்பரத்தில் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் என்பதும் தெரிய வந்தது.

   

இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த மூட்டையை பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அஜய்குமார் அவரது தம்பி ஆகாஷ் மற்றும் இளஞ்சிறார் ஆகிய 3 பேரும் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி அதை காய்கறி மற்றும் சரக்கு வாகனங்களில் மறைத்து சிதம்பரத்திற்கு எடுத்து வந்தும்.

பின்னர் அதை சிதம்பரம் ஆனந்தராயர் தெருவில் உள்ள இளஞ்சிறார் வீட்டில் மறைத்து வைத்ததும் தெரிந்தது. மேலும் அவர்கள், தங்களுக்கு தெரிந்த மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்த்திரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, நெய்வேலி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகியோருக்கு மொத்தமாக விற்பனை செய்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதைடுத்து அவர்களிடம் இருந்து கூல்லிப், ஹான்ஸ் பாக்கெட்டுகள், விமல் பாக்குகள் உள்ளிட்ட சுமார் 260 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினார். இவற்றின் மதிப்பு சுமார் ரூ 5 லட்சம் ஆகும். மேலும் அவர்கள் வைத்திருந்த 3 மொபட் மற்றும் பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் குட்கா பொருட்கள் விற்ற சகோதரர்களான அஜய்குமார், அவரது தம்பி ஆகாஷ், இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

கானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு திருவிளக்கு பூஜை

குறிஞ்சிப்பாடி அருகே எட்டு கிராம பொதுமக்கள் அகண்டம் எடுத்து வழிபடும் வினோத திருவிழா