பிரபாஸ் நடிப்புல மாஸ் ஆக்ஷன் த்ரில்லரா உருவாயிருக்கு ‘தி ராஜா சாப்’
பாகுபலி பிரபாஸ் நடிப்புல மாஸ் ஆக்ஷன் த்ரில்லரா உருவாயிருக்கு ‘தி ராஜா சாப்’.
ட்ரெய்லர்லயே பிரபாஸ் ஒரு முதலையோட சண்டை போடுற மாதிரி சீன் இருந்துச்சு.
அதைப் பார்த்ததுல இருந்தே ரசிகர்கள் செம குஷியில இருந்தாங்க. ஆந்திரா, தெலங்கானாவுல இன்னைக்கு அதிகாலை ப்ரீமியர் ஷோ நடந்துச்சு. அப்போ சில ரசிகர்கள் கைகள்ள குட்டி முதலையை தூக்கிட்டு தியேட்டருக்குள்ள கெத்தா நுழைஞ்சாங்க.
இதைப் பார்த்த தியேட்டர் ஸ்டாஃப் மற்றும் மத்த ஆடியன்ஸ் “ஐயோ நிஜ முதலையா?”னு அலறி அடிச்சுட்டு ஓடிட்டாங்க.
செக்யூரிட்டிங்க வந்து தடுத்தப்போ தான் தெரிஞ்சது, அது நிஜ முதலை இல்ல – ரப்பரால செஞ்ச ‘டம்மி’ முதலை பொம்மைனு!
அப்புறம் தான் எல்லாரும் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க.”படம் முழுக்க முதலையோட வர்ற சீன்ஸ் தான் ஹைலைட்னு சொல்றாங்க.
அதனால அந்த சீனை ஸ்பெஷலா கொண்டாடத்தான் இந்த பொம்மையை எடுத்துட்டு வந்தோம்”னு ரசிகர்கள் கூலா பதில் சொல்லிட்டு போயிட்டாங்க.
முதலை சீன் மாஸ்: தியேட்டர்ல அந்த முதலை வர்ற சீனுக்கு ரசிகர்கள் விசில் அடிச்சு தியேட்டரையே ரெண்டு ஆக்குறாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் பிரபாஸை இப்படி ஒரு கமர்ஷியல் ரோல்ல பாக்குறது அவரோட ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட்டா இருக்கு.
ஆக்ஷன் காட்சிகள் சூப்பரா இருந்தாலும், திரைக்கதை கொஞ்சம் ஸ்லோவா இருக்குறதா சில பேர் கமெண்ட் பண்றாங்க.
ரசிகர்களோட இந்த மாதிரி ‘பைத்தியக்காரத்தனமான’ கொண்டாட்டத்தால படத்துக்கு செம பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. படம் முதல் நாளே வசூல்ல பெரிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
