in

‘பராசக்தி’ 23 கட் போடச் சொன்ன தணிக்கைக் குழு


Watch – YouTube Click

‘பராசக்தி’ 23 கட் போடச் சொன்ன தணிக்கைக் குழு

 

2026 புத்தாண்டு பொங்கல் ரேசில் மாஸாக களமிறங்கும்னு எதிர்பார்த்த ‘பராசக்தி’ இப்போ செம சர்ச்சையில மாட்டியிருக்கு.

எஸ்கே கூடவே ஜெயம் ரவி, அதர்வான்னு ஒரு பெரிய கூட்டணியே இந்த படத்துல இருக்கு. இந்தப் படம் 1965-ல நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமா வச்சு எடுக்கப்பட்டிருக்கு. இதுதான் இப்போ பிரச்சனைக்கே காரணமாம்.

23 கட் போடச் சொன்ன சென்சார்: படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்துல இருக்குற 23 இடங்கள்ல காட்சிகளையும் வசனங்களையும் மாத்தணும் இல்லன்னா தூக்கணும்னு சொல்லிட்டாங்களாம்.

மையக்கருக்கே ஆபத்து: இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் காட்சிகள் தான் படத்தோட மெயின் மேட்டரே. அதை நீக்கச் சொன்னா படம் எப்படி ஓடும்னு படக்குழு ரொம்பவே அப்செட்ல இருக்காங்க.

இந்த குழப்பத்தால ஒரு அதிர்ச்சியான நியூஸ் வந்திருக்கு. நெதர்லாந்து நாட்டுல நாளைக்கு (ஜனவரி 10) நடக்க வேண்டிய ரிலீஸை அதிகாரப்பூர்வமா கேன்சல் பண்ணிட்டாங்க.

அங்க டிக்கெட் புக் பண்ணவங்களுக்கு 10 நாள்ல பணத்தைத் திருப்பித் தர்றதா சொல்லிட்டாங்க. வெளிநாட்டுல ரிலீஸ் நின்னதால, தமிழ்நாட்டுலயும் படம் தள்ளிப்போகுமோன்னு ரசிகர்கள் இப்போ பயத்துல இருக்காங்க.

‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய் ரசிகர்கள் கோர்ட்ல சண்டை போட்ட மாதிரி, இப்போ ‘பராசக்தி’ படக்குழுவும் சென்சார் போர்டு கூட பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க.

செட் ஆகலைன்னா இவங்களும் கோர்ட்டுக்குப் போவாங்கன்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க.


Watch – YouTube Click

What do you think?

‘ஜனநாயகன்”சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படம் மாதிரி கோர்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு – ‘ஜனநாயகன்’ 

“நாயையும் மனுஷனையும் (ஆண்களையும்) எப்படி ஒப்பிடலாம்?