‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படம் மாதிரி கோர்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு – ‘ஜனநாயகன்’
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம் இப்போ ஒரு பெரிய ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படம் மாதிரி கோர்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு.
இன்னைக்கு மதியம் வரைக்கும் நடந்த அதிரடி திருப்பங்கள் என்னன்னா, விஜய் சாரோட கடைசிப் படம் ‘ஜனநாயகன்‘ இன்னைக்கு ரிலீஸ் ஆக வேண்டியது.
ஆனா சென்சார் போர்டு இழுத்தடிச்சதால மேட்டர் சென்னை ஹைகோர்ட்டுக்குப் போச்சு. இன்னைக்கு காலையில இருந்து கோர்ட்ல நடந்த ‘லைவ்’ அப்டேட்ஸ்:முதல்ல இந்த வழக்கை விசாரிச்ச தனி நீதிபதி, சென்சார் போர்டை நல்லா வறுத்து எடுத்துட்டாரு.
“யாரோ கொடுத்த புகாரை வச்சுக்கிட்டு, படத்தை ‘மறு ஆய்வுக்கு’ அனுப்புனது ரொம்பத் தப்பு.” “இப்படி அனானிமஸ் புகார்களை எல்லாம் விசாரிச்சா அது ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகிடும்.”
அதனால, படத்துக்கு உடனே ‘U/A’ சர்டிபிகேட் கொடுத்து படத்தை ரிலீஸ் பண்ண வழி செய்யுங்கன்னு அதிரடி உத்தரவு போட்டாரு.தனி நீதிபதி சொன்னதை கேட்டு ரசிகர்கள் குஷியான நேரத்துல, சென்சார் போர்டு சும்மா இல்லாம உடனே ஹைகோர்ட் தலைமை நீதிபதி முன்னாடி ‘மேல்முறையீடு’ செஞ்சிருக்காங்க. “தனி நீதிபதி கொடுத்த உத்தரவை ஏத்துக்க முடியாது, இதை மறுபடியும் விசாரிக்கணும்”னு அவங்க மனு தாக்கல் பண்ணியிருக்காங்க.
தலைமை நீதிபதி என்ன சொல்லிட்டாருன்னா, “மனுவைத் தாக்கல் பண்ணுங்க, அதை விசாரணைக்கு எடுக்குறது பத்தி இன்னைக்கு பிற்பகல்ல (Afternoon) முடிவு பண்றோம்“னு சொல்லிட்டாரு. அதாவது, ‘ஜனநாயகன்’ இன்னைக்கு தியேட்டருக்கு வருமா இல்லையாங்கிற கடைசி முடிவு, இன்னைக்கு மதியத்துக்கு மேல தலைமை நீதிபதி கொடுக்கப்போற தீர்ப்புல தான் இருக்கு!

