in

நடிகர் சூரி ரசிகரிடம் மன்னிப்பு… நடந்தது என்ன?


Watch – YouTube Click

நடிகர் சூரி ரசிகரிடம் மன்னிப்பு… நடந்தது என்ன? 

 

தமிழ் சினிமாவுல காமெடி நடிகரா ஆரம்பிச்சு, இப்போ ஹீரோவா வளர்ந்திருக்கிறவர் நடிகர் சூரி.

அவர் நடிச்ச ‘மாமன்’ படம் சமீபத்துல ரிலீஸாகி நல்லா ஓடுச்சு. இதைத் தொடர்ந்து, மதிமாறன் புகழேந்தி டைரக்‌ஷன்ல வர்ற தன்னோட அடுத்த படமான *’மண்டாடி‘* ங்கிற படத்துல நடிச்சிட்டு இருக்காரு.

இந்தப் படத்தை எல்ரட் குமாரோட ஆர்.எஸ். இன்போ கம்பெனி தயாரிக்கிறாங்க. இதுல மகிமா நம்பியார் ஹீரோயினா நடிக்கிறாங்க.

ஜி.வி.பிரகாஷ் மியூசிக் போடுறாரு. நடிகர் சுஹாஸ் ஒரு முக்கியமான ரோல்ல நடிக்கிறாரு. இந்தப் படம், மீனவர்களோட படகு ரேஸை மையமா வெச்சு எடுக்கப்பட்டுட்டு இருக்கு. ஷூட்டிங் ரொம்பப் பரபரப்பா போயிட்டு இருக்கு.

இந்த நேரத்துல, ரசிகர் ஒருவர் நடிகர் சூரியை எக்ஸ் (ட்விட்டர்) தளத்துல “டேக் பண்ணி, ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தாரு “அன்புள்ள சூரி அண்ணா, உங்க பட ஷூட்டிங் எங்க ஊர்ல நடக்குறது எங்களுக்குச் சந்தோஷம் தான், ஆனா, ராத்திரி நேர ஷூட்டிங்ல, வேடிக்கை பார்க்க வர்ற எங்க ஊர் மக்கள் கிட்ட உங்க பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிறாங்க, இதைப் பத்தி தயாரிப்பு கம்பெனிகிட்ட கொஞ்சம் சொல்லுங்க. நன்றி அண்ணா.” இந்தப் பதிவைப் பார்த்த நடிகர் சூரி உடனே அதுக்குப் பதில் கொடுத்திருக்காரு.

“தம்பி, உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் மனசு நிறைஞ்ச நன்றி. ஷூட்டிங்ல நடந்த இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கிறோம். இதைத் தயாரிப்பு டீம்கிட்டயும், பவுன்சர்ஸ் அண்ணன்கிட்டயும் சொல்லி, இனி ரொம்ப கவனமா இருக்கச் சொல்றோம்.

எப்பவும் போல உங்க அன்புதான் எங்களுக்குப் பலம். மறுபடியும் நன்றி,”ன்னு சொல்லி ரொம்பப் பணிவா மன்னிப்பு கேட்டுப் பதிவு போட்டிருக்காரு.

What do you think?

மங்களூரில் வாராஹி பஞ்சுர்லி தெய்வ கோலாவில் நடிகர் ரிஷாப் ஷெட்டி

போதைப்பொருள் கேஸ்ல கைதான இணை தயாரிப்பாளர்