in

ஸ்ரீ முத்துரட்சகமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 108 திருவிளக்கு பூஜை

ஸ்ரீ முத்துரட்சகமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 108 திருவிளக்கு பூஜை 

 

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துரட்சகமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமிக்கு 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துரட்சகமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக ஐயப்ப சாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் பெண்கள் குத்துவிளக்குகளுடன் கலந்து கொண்டு அந்த குத்துவிளக்குக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐயப்பன் சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

உபயதாரர்கள் ஞானசேகரன் செங்குந்தர்,மணிகண்டன் மற்றும் அறங்காவலர் குழு: இளைஞர் குழு நாலுமூலை சுமைதாங்கி மற்றும் செவராய நகர்வாசிகள் செய்திருந்தனர்..

What do you think?

பழனி திரு ஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் பணிகள் நிறைவு 

 தஞ்சையில் மத நல்லிணக்கத்தோடு கார்த்திகை தீப வழிப்பட்டன