என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க – நடிகை ஆயிஷா கான்
இந்தி பிக் பாஸ் 17 ஷோ மூலமா மக்கள் மத்தியில ரொம்பப் பேசப்பட்டவங்கதான் நடிகை ஆயிஷா கான்.
இவங்க முதல்ல ‘பால்வீர ரிட்டர்ன்ஸ்’ (2019) ங்கிற டிவி சீரியல் மூலமா சினிமா உலகத்துல அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் தெலுங்குல ‘முகச்சித்ரம்’ ங்கிற படத்துல நடிச்சு அறிமுகமானாங்க.
தொடர்ந்து ‘ஓம் பீம் புஷ்’, ‘மனமே’ படங்களிலும் நடிச்சிருக்காங்க.
இப்போ அவங்க தெலுங்கு, இந்தி படங்கள்ல பிஸியா நடிச்சுட்டு இருக்காங்க.சமூக வலைதளங்கள்ல எப்பவும் ஆக்டிவா இருக்கிற ஆயிஷா கான், இப்போ அவங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல புதுசா சில போட்டோக்களைப் பகிர்ந்து இருக்காங்க.
அந்தப் போட்டோவுக்கு அவங்க, “என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க” ன்னு கேப்ஷனும் கொடுத்திருக்காங்க.
இந்த புதுப் புகைப்படங்கள் இப்போ இணையத்துல ரொம்ப வைரல் ஆகிட்டு இருக்கு.


