பழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சி சிதம்பர நாத ஞானபிரசுகாச தேசிக பரமச்சாரியா சுவாமிகள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் சேங்கப்புத்தேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று காலை 9 மணி அளவில் மங்கல இசை,திருமுறை விண்ணப்பம்,மகா கணபதி வேள்வி,நவகிரக நல விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆதாரதனை செய்து தொடங்கியது.
நேற்று மாலை 5 மணி அளவில் யாகசாலை திருக்கலசங்கள் எழுந்தருள செய்தல்,வாயில் காவலர் பூசை,பரிவாரங்கள் பூசை முந்து தமிழ் மாலை முருகனுக்கு முதல் கால வேள்வி அளித்தல்,மகா தீபாராதனை எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று காலை கோபுர குடமுழுக்கு ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள்,காஞ்சி சிதம்பரநாத ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,ஜோதிடர் சிரோன்மணி குமரேசன் ஆகியோர் தலைமையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து கடன் புறப்பட்டு மூலவர் கோபுர கலசங்கள் மீது புனித நீரூற்றி பக்தர்களுக்கு இறுதியாக தெளிக்கப்பட்டு அன்னதானம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 5,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.


