in

தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

 

நாகை அவுரி திடலில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ட்ரோன் காட்சிகள்.

நாடு முழுவதும் SIR திட்டத்தை மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் நிறைவேற்றி திருத்தப் பணிகள் நடந்துவருகிறது.

வாக்கு திருட்டை ஊக்குவிக்கும் SIR திட்டத்தை கைவிட வேண்டுமென்று, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாகை எம்பி வை.செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

 ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் எஸ் ஐ ஆர் யை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்