in

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலை

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலை

 

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட காவல் துறையை சேர்ந்த 130 காவலர்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர் – கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி.

எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பேரிடர் மேலாண்மை துறையில் பயிற்சி பெற்ற காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சம்பந்தமான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 130 பேர் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலில் பேரில் எங்கு காவல்துறை உதவி தேவைப்படுகிறது என அறிந்து அங்கு பணியமரத்தப்படுவார்கள். மேலும் பேரிடரால் பாதிக்கப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும் படகு, மின்விளக்கு, மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட 22 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. எந்தவிதமான மீட்பு பணிக்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

What do you think?

நாமக்கல் பரமத்திவேலூர் அருகே கருப்பண்ண சுவாமி மண்டல பூஜை

பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா