in

செங்கம் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கம் அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் மனதை உருக்கும் துயரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அப்பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி கௌரி ஆகியோர் செங்கல் சூளைகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளனர்..

இவர்களுக்கு கிஷோர் (வயது 5), தேவேஷ் (வயது 4) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வருகின்றனர். மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்

நேற்றைய தினம் உறவினர் ஒருவர் உயிர் இழந்ததைத் தொடர்ந்து இறப்பு நிகழ்வில் பங்கேற்ற வெங்கடேசன், வீட்டிற்கு திரும்பும் வழியிலேயே மீண்டும் மது அருந்தியுள்ளார்.

இதனை தட்டி கேட்ட மனைவி கௌரியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் மனம் உடைந்த கௌரி, தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்

நீண்ட நேரமாக குழந்தைகளுடன் சென்ற கௌரி வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய கௌரி நீண்ட நேரமாக வீட்டுக்கு வரவில்லை என அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் கௌரியை பல இடங்களில் தேடியுள்ளனர் எங்கு தேடியும் கௌரி கிடைக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சில விவசாய நிலங்களில் தேடியுள்ளனர் அப்போது அங்குள்ள விவசாய கிணற்றின் கரை ஓரத்தில் கௌரியின் செல்போன் மற்றும் அவர்கள் அணிந்திருந்த காலணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோபத்தில் கௌரி கிணற்றில் குழந்தைகளின் விழுந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளாரா என அச்சத்தில் செங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அப்போது தீயணைப்புத்துறை வீரர்கள் நவீன கருவிகளின் உதவிகளோடு கிணற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு கௌரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கிஷோர் மற்றும் தேவேஷின் உடலையும் கண்டெடுக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்டனர் அதன் பிறகு மூன்று பேர் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் செங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மூன்று பேரின் உடல்களை செங்கம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

What do you think?

பிரபல நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரபல நடிகை அதுல்யா ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்….

தஞ்சையில் இன்று தண்டவாளத்தில் முதியவர் பிணம் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா…?