நெய்வேலியில் அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழா
கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் 54-வது ஆண்டு திவக்க விழாவினை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவினை அதிமுகவினர் சிறப்பான முறையில் கொண்டாடினர்.
அதிமுக கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில்,
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

மேலும் இந்த துவக்க விழாவில் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு இனிப்புகள் வழங்கி புத்தாடைகளை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் என்.எல்.சி அண்ணா ஊழியர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


