in ,

விருதுநகரில் நோட்டு போட்டு தீயணைப்பு துறையினர் தீபாவளி வசூல் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பறிமுதல்…

விருதுநகரில் நோட்டு போட்டு தீயணைப்பு துறையினர் தீபாவளி வசூல் செய்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை…..கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பறிமுதல்…

தீபாவளி பண்டிகையையொட்டி விருதுநகரில் உள்ள பல்வேறு கடைகள், தனியார் நிறுவனங்கள், மரக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறையினர் நோட்டு போட்டு வசூல் செய்ததாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து விருதுநகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் அருகே உள்ள தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்..

அப்போது, அவர்கள் பல்வேறு கடைகளில் தீபாவளி மாமுல் வசூலித்து வந்ததும், இதில் மற்றொரு தீயணைப்பு வீரர் வினோத் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரிடமும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், தீபாவளி பண்டிகையை ஒட்டி விருதுநகரில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்களில் நோட்டு போட்டு ரூ.4.94 லட்சம் வசூல் செய்தது தெரியவந்தது. இதில் பிடிபட்ட மூவரிடம் இருந்து ரொக்கமாக ரூ.59,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வினோத் என்பவரது வங்கி கணக்கில் ரூ.3.79 லட்சம் டெபாசிட் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு ஜிபே, போன் பே மூலம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

110 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடி கைது

விவசாய நிலங்களில் மாடுகள் பயிர்களை அழித்து நாசம் செய்து வருவதாக புகார்