in

தடையை மீறி தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு…டிராக்டருடன் மடக்கி பிடித்த போலீசார்..

தடையை மீறி தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு…டிராக்டருடன் மடக்கி பிடித்த போலீசார்..

தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து மணல் திருட்டு நூதன முறையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாரும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என புதுச்சேரி மாநில வருவாய் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தடை உத்தரவை மீறி சோரியாங்குப்பம் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் கடத்தப்படுவதாக பாகூர் போலீசாருக்கு கட்டுபாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சோரியாங்குப்பம் நாவம்மாள் கோயில் அருகே ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (55), சீனிவாசன் (59), நாராயணன் (55), முருகையன் (50), மற்றும் ஆறுமுகம் (67) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மணல் எடுத்ததாக கூறி உள்ளனர். ஆனால் போலீசார், பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அவர்களுக்கு சொந்தமான இடமா? அல்லது அரசுக்கு சொந்தமான இடமா? என குறித்து ஆய்வு செய்ய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சர்வேயருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் அவ்விடத்தை ஆய்வு செய்தபோது அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதும், ஆற்று மணல் எடுத்தது குற்றம் என தெரிய வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

புதுச்சேரி..நள்ளிரவில் பல்கலை மாணவர்கள் மீது தடியடி

கோவை, அவிநாசி சாலை உயர் மட்ட மேம்பாலம் முழுவதும் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது