in

ஜக்கமா சொல்றா… நல்லகாலம் பொறக்குது… நாகையில் திமுக நூதன பிரச்சாரம்

ஜக்கமா சொல்றா… நல்லகாலம் பொறக்குது… நாகையில் திமுக நூதன பிரச்சாரம்

 

ஜக்கமா சொல்றா… நல்லகாலம் பொறக்குது… நாகையில் திமுக சாதனைகளை விளக்கி குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வீடு வீடாக நூதன பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் குடுகுடுப்புக்காரன் வேடமிட்டு திமுகவிற்கு ஆதரவாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி நாற்பதாவது தொகுதியாக நாகை சட்டமன்ற தொகுதியில் இன்று அவர் பிரச்சாரம் செய்தார். குடுகுடுப்பு காரன் வேடமிட்டு நாகை மாவட்டம் குத்தாலம் கிராமத்தில் வீடுவீடாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம், பெண்களுக்கு கட்டண மில்லா பேருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை, தொழில் வளர்ச் சிகள், மகளிர் உரிமைத் தொகை போன்றவைகளை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று குடுகுடுப்பை அடித்தபடி ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றபடி நூதனம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குத்தாலம், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்றும், கடை வீதிகள், பேருந்து நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்.

திமுக அரசின் சாதனைகளை குடுகுடுப்பை அடித்து நூதன பரப்புரையில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

What do you think?

சாய் பாபா கோவிலில் குரு வார சிறப்பு வழிபாடு

கோயம்பேட்டில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் விபரீதம்