in

கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் கருடசேவை புறப்பாடு

கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் கருடசேவை புறப்பாடு

 

கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி திருவோணம் த்தை முன்னிட்டு கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கருங்குளம் – வகுளகிாி ஷேத்திரம் என்று அழைக்கப்படும் ஊாில் குன்றின் மேல் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் அமைந்திருக்கின்றது.

திருப்பதி மலையில் தோ் செய்யது போக மிதம் இருந்த 2 கட்டைகள் இங்கு ப்ரதிஸ்டை செய்து சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.

அக் கட்டைகளை ஸ்ரீ வெங்கடாசலபதியாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா். பல நுற்றாண்டுகளாக தினமும் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றது. இன்றளவும் அந்த கட்டைகள் பின்னப்பட்டதில்லை. மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றாா்.

சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்டாசி திருவோணம் த்தை முன்னிட்டு இன்று காலையில் 108 கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு 16 வகை பொருட்களால் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா் வெங்கடாஜலபதி அருள்பாலிக்க உற்சவா் ஸ்ரீனிவாச பெருமாள் தன் பிாியவாகனமான பொிய திருவடியான வைனதேயன் என்ற கருடாழ்வாா் மீது சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிகொடுத்தாா்.

குடைவரை வாயில் தீபாராதனையுடன் கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. திருக்கோவிலின் வெளியே குடைகள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமிக்கு ஜே என்ற கோஷங்களோடு மங்கள வாத்தியங்கள் முழங்க மலை மீது 2 முறை சுவாமி வலம் வந்தாா். இந் நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் தாிசனம் செய்தனா்.

What do you think?

ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் ரதா ரோஹணம்

புது கரன்சி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்