in

புதுவை சட்டசபையில் 108 வகையான பொருட்களுடன் கொண்டாடிய விஜயதசமி

புதுவை சட்டசபையில் 108 வகையான பொருட்களுடன் கொண்டாடிய விஜயதசமி

 

புதுவை சட்டசபையில் 108 வகையான பொருட்களுடன் விஜயதசமி
கொண்டாடிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணகுமார்…

புதுவையில் விஜயதசமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விஜயதசமியையொட்டி புதுவை சட்டசபையிலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களிலும் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் சாய்சரவணக்குமார் தனது அலுவலகத்தில் விஜயதசமி விழா கொண்டாடினார். அங்கு இனிப்பு, காரம், பழங்கள் என 108 வகையான பொருட்களை படையலுக்கு வைத்திருந்தார்.

கடலை மிட்டாய், தேன்மிட்டாய், பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய், மற்றும் பல்வேறு காரம், இனிப்பு, பழங்கள் என 108 விதமான பொருட்களை வைத்திருந்தார். பூஜையில் பிரதமர் மோடி, முன்னாள் அமைச்சர் சாய்சரவணக்குமார், ஊசுடு தொகுதி, அவரின் மனைவி பிரபாவதி திருபுவனை தொகுதி எனக்கூறி அர்ச்சனை செய்தனர்.

 

பூஜையில் சபாநாயகர் செல்வம், திருபுவனை தொகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள், ஆதரவாளர்கள், பாஜகவினர் மற்றும் அலுவலக ஊழியர்கள், சட்டசபை காவலர்கள் என நுாற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பூஜையின் முடிவில் படையலுக்கு வைக்கப்பட்ட பொருட்களை விருப்பமானதை எடுத்து கொள்ளும்படி கூறினார்.

அங்கிருந்தவர்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை எடுத்து சென்றனர்.

What do you think?

விஜய சரஸ்வதி திருக்கோவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேக அலங்காரம்

நவராத்திரி கொலு விழா சிறப்பு அபிஷேகம் ஆராதனை