திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அனுமந்த வாகன புறப்பாடு
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் ஆறாவது நாளான இன்று காலை அனுமந்த வாகன புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாள் ஆன இன்று காலை எட்டு மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமியின் அனுமந்த வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அனுமந்த வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலிலிருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சமர்ப்பணங்களுக்கு பின் மலையப்ப சுவாமியின் அனுமந்த வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமந்த வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு துவங்கி 5 மணி வரை தங்க தேரோட்டமும் இரவு 7 மணிக்கு துவங்கிய 9 மணி வரை கஜவாகன புறப்பாடும் நடைபெற உள்ளது.


