in

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நவராத்திாி கொலு

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நவராத்திாி கொலு

 

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நவராத்திாி கொலு. திரளான பக்தர்கள் சுவாமி அம்பாளை தாிசித்து கொலுவினை கண்டு மகிழ்ந்தனா்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் உடனுறை அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமைவாய்ந்தது.

சிறப்புவாய்ந்த இத்திருக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதன் ஒரு நிகழ்வாக நவராத்திாி கொலு திருவிழா 10 தினங்கள் நடைபெறுகின்றது. காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மாலையில் சுவாமி சன்னதியில் அமைந்துள்ள சோமவார மண்டபத்தில் பஞ்ச மூா்த்திகள் ஆராதனை நடைபெற்றது. இம் மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக 500 க்கும் மேற்பட்ட சிலைகளை – மூப்பெரும் தேவியா், மூம்மூா்த்திகள் ,அஷ்ட லெட்சுமிகள், தசாவதார காட்சிகள், சக்கரத்தாழ்வாா், ஆதி சங்கரர் மண்டபத்தின் உள்ளே பரமசிவன் பாா்வதி கைவாயமலை காட்சி முருகன் கோவா்த்தனகிாி கண்ணன், மரத்தடி தட்சிணாமூா்த்தி, ஸ்ரீனிவாச கல்யாணம், பெருமாள் கருடசேவை , மகான்கள், ஆச்சாாியா்கள், குழந்தைகளுக்கான சோட்டாபீம் குழுவினா் போன்ற கொலுபொம்மைக்ள காட்சி உயிரோட்டமாக கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மேலும் நெல்லையப்பா் மூல லிங்கம் தோன்றய வரலாறு, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் என வருங்கால சந்ததியினருக்கு நம் பாரம்பாிய பண்டிகைகளைப் பற்றிய விழிப்புணா்வு ஏற்படும் வகையிலும் ஆன்மீக நெறியில் தொடா்ந்து சாதனை செய்யும் வகையிலும் நவராத்திாி கொலு அமைந்திருந்தது.

சோமவார மண்டபத்தில் பஞ்சமூா்த்திகள் சுவாமி அம்பாள், விநாயகா் சுப்பிரமணியா் மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகியோருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு அா்ச்சனை சோடச தீபாராதனைகள் நடைபெற்றது.

2ம் நாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு லலிதா சகஸ்ராம அா்ச்சனை நடைபெற்றது.

கொலு பார்க்க வரும் பெண்கள், குழந்தைகள், கன்னிப் பெண்கள் ஆகியோருக்கு வெற்றிலை பாக்கு பழம் சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

What do you think?

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மேலூர் பொதுமக்கள் மனு

நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் திருத்தோர் வெள்ளோட்டம்