in

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூரில் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன்பு 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை 10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு கால முறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து சலுகைகள் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்து இறப்பு நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் 2025 கொடியேற்றம்