திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அலங்கார மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கும் திருமலை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் அலங்கார மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கும் திருமலை

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் வைபவமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் பிரமோற்சவ ஏற்பாடுகளை தேவஸ்தானம் வெகு சிறப்பாக செய்து வருகின்றது.
தேவஸ்தானத்தின் மின்வாரியத் துறை அலங்கார மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணுவின் பல்வேறு உருவ அமைப்புகள் திருமலை மாட வீதிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலங்காரம் மின்விளக்குகளின் பக்தர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் ஆங்காங்கே அலங்கார மின்விளக்கு தோரணங்கள் தசாவதாரம் உருவ அமைப்புகள் வெங்கடேச சுவாமியின் உருவ அமைப்பு கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


