in

மதுரை மக்களே சுற்றுலா செல்லலாம் வாங்க

மதுரை மக்களே சுற்றுலா செல்லலாம் வாங்க

 

ஏங்க எங்க ஊருக்கு வாங்க என்பது போல மதுரை மக்களே சுற்றுலா செல்லலாம் வாங்க என்கின்ற அடிப்படையில் புரூணை நாட்டில் இருந்து வந்திருந்த சுற்றுலா நிறுவனத்தினர் – சுற்றுலா பயணிகளை கவரும் திட்டங்கள் மற்றும் விலக்க படங்களை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த குழுவினர்.

நம்முடைய அன்றாட வாழ்வில் அனுதினமும் வேலை குடும்பச் சுமை இப்படியாக ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய வேளையில் ஓய்வு மற்றும் ரிலாக்ஸேசன் என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கோடை விடுமுறை குளிர்கால விடுமுறை இப்படியாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் நம் குடும்பத்தினரோடு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரக்கூடியவர்கள் இருந்து வரக்கூடிய வேளையில்

குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளுக்கே செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு அதன் அருகிலேயே இருக்கக்கூடிய பிற சுற்றுலா தளங்கள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் அங்கே இருக்கக்கூடிய முக்கிய மான சுற்றுலா இடங்கள் குறித்து தெரிய வருவதில்லை என தெரிவிக்கின்றனர் ப்ருனே நாட்டு சுற்றுலா அதிகாரிகள்.

அதன் அடிப்படையில் மதுரை அழகர் கோவில் சாலையில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் மதுரையைச் சேர்ந்த முக்கிய சுற்றுலா நிறுவனத்தினர் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் உடைய உரிமையாளர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் ப்ருனே நிறுவனத்தினர் ஒலி ஒளி காட்சிகளாக அங்கு இருக்கக்கூடிய இயற்கை சுற்றுலா தளங்கள் மற்றும் கடல் சார்ந்த சுற்றுலா மையங்கள் கடல் உணவுகள் சுற்றுலா பயணிகள் தங்கக்கூடிய இடங்கள் என அனைத்தையும் வீடியோ காட்சிகளாகவும் எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ப்ரூணை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குறிப்பாக சென்னையிலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரத்தில் பயண தூரம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறினர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுவையில்.

பிற நாடுகளை ஒப்பிடுகையில் குறிப்பாக மலேசியா என்றால் உலகம் போர் லங்காவில் இப்படித்தான் சென்று வருவார்கள் ஆனால் சபா என்கின்ற இந்த இடம் இருப்பது நிறைய நபர்களுக்கு தெரியவில்லை.

மக்கள் குறிப்பாக சிங்கப்பூர் கோலாலம்பூர் பாங்காங் வியட்நாம் இப்படித்தான் செல்கிறார்கள் ஆனால் இவை அனைத்தையும் ஒரே இடம் என்றால் அது சபா இல்லை ஷரவா என்கின்ற இந்த இட சுற்றுலாத்தளத்தில் இருக்கிறது.

இஸ்லாமிய சுல்தான்கள் ஆட்சி செய்யக்கூடிய இந்த பகுதியில் குறிப்பாக ஏராளமான சுற்றுலா தளங்களும் வனப்பகுதியோடு ஒரு திரில்லிங் அனுபவமும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும் குறிப்பாக நம்முடைய தென்னிந்திய உணவுகள் என்பதை தாண்டி ஏராளமான குறிப்பாக மீன் உணவுகள் இங்கு கிடைக்கின்றன.

சுற்றுலா பயணி ஆக நீங்கள் வரம்பட்சத்தில் இயற்கை அங்க இருக்கக்கூடிய மக்கள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவர்களை பார்த்து ரசித்து தெரிந்து கொள்ளலாம்.

நிச்சயமாக ஒரு வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்காது சொந்த ஊரில் இருப்பது போதுதான் இருக்கும்.

குறிப்பாக ஒரு சாதாரண மக்கள் சென்று வரக்கூடிய வகையில்தான் இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சென்னையிலிருந்து புரோனே நாட்டிற்கு வாரத்தில் மூன்று விமானங்கள் இருக்கிறது, வாரத்திற்கு ஏழு விமானங்கள் உள்ளன.

ஏழு நாட்கள் 15 நாட்கள் 21 நாட்கள் இப்படி எத்தனை நாட்கள் வருகிறார்களோ அதற்கு ஏற்றார் போல் நாம் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். எனவே அதன் அடிப்படையில் மதுரையில் உள்ளவர்களும் சுற்றுலா வரவேண்டும் குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய பண்பாடு கலாச்சாரம் உணவு பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கில் மதுரையில் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

What do you think?

நகராட்சி கடைகளை இடிக்கும் பணி பொதுமக்கள் கண்டனம்

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிப்பு